HOW TO MAKE VEG SOUP / வெஜ் சூப் செய்வது எப்படி ?
தேவையான பொருள்கள்:
1. சின்னவெங்காயம் - 5
2. தக்காளி - 2
3. காரட் - 1
4. சோளம் - கால் கப்
5. உருளைக்கிழங்கு - 1
6. பச்சைமிளகாய் - 1
7. இஞ்சி - ஒரு சிறிய துண்டு
8. பூண்டு - 3 பல்
9. பால் - அரை கப்
10. மிளகு பொடி - தேவைக்கேற்ப
11. சோயா மாவு - 2 மேசைக்கரண்டி
12. உப்பு - தேவைக்கேற்ப
13. மல்லித்தழை - சிறிதளவு
1. சின்னவெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு,
காரட், மக்காச்சோளம், உருளைக்கிழங்கு,
பச்சைமிளகாய் அனைத்தையும் ஒன்றாக குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
2 . பின்னர் மக்காச்சோளம் மற்றும் பச்சைமிளகாய்
தவிர மீதி பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில்
போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
3. பின்னர் அரைத்த விழுதை வேக வைத்த
தண்ணீர், பச்சைமிளகாய் மற்றும் சோளத்துடன்
சேர்த்து கரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை அடுப்பில் வைத்து கொ க்க விடவும். (அடுப்பை மிதமான தணலில் வைத்து செய்யவும்.)
4 . பிறகு பாலில் சோயா மாவு மற்றும் மிளகுத்தூள்
சேர்த்து கலந்து அதை கொதிக்கும் சூப்பில் விட்டு
உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் அணைத்து
விடவும். தேவையெனில் இறுதியாக மிளகுபொடி
சற்று கூட சேர்த்துக் கொள்ளலாம்.
5. பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி மேலே
கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
Comments
Post a Comment